வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் அனைத்து பொதிகளுக்கும் இனி விசேட சோதனை

Published On Monday, 16 January 2017 | 18:21:00

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்படும் அனைத்து பொதிகளும் பரிசோதனை செய்யப்படும் என தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கு மத்திய தபால் பரிமாற்றகத்தில் இரண்டு புதிய ஸ்கேன் இயந்திரங்களைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் மத்திய தபால் பரிமாற்றகத்தில் காணப்பட்ட பொதி ஒன்றிலிருந்து 100 இலட்சம் பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டன.
இதனை கவனத்தில் எடுத்து. மத்திய தபால் பரிமாற்றகத்திற்கு வரும் அனைத்துப் பொதிகளையும் சோதனைக்கு உட்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved