Breaking News

மெரினாவில் தடியடி: பெண்களின் உடைகளை கிழித்த பொலிஸார்? பதற்றம் தொடா்கிறது

மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மற்றும் பெண்களை வெளியேற்ற முயன்ற பொலிஸார் அவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களின் ஆடைகளை பொலிஸார் கிழித்ததாக மாணவர்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்ற வலியுறுத்தி சென்னை மெரினாவில் 7வது நாளாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் என லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில்

நேற்று முதலே பொலிஸார் குவிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை ஏராளமான பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெண்கள், தாய்மார்கள் என்றும் பாராமல் பொலிஸார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தினர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் சிதறியோடியுள்ளனர்.

அப்போது பல பெண்களின் ஆடைகளை பொலிஸார் கிழித்ததாக கூறப்படுகிறது. தடியடியோடு நிறுத்தாமல் பெண்கள் மீது கைவைத்து அவர்களின் ஆடைகளை கிழித்ததாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொலிஸார் மீது கல்வீச்சுத்தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments