Friday, 13 January 2017

விற்பனைப் பொருளாக மாறியுள்ள உம்ரா மற்றும் ஹஜ் யாத்திரை - முழு விபரம்.!

அஸ்ஸலாமு அலைக்கும் -  அல்லாஹ் குர்ஆனில், அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும் உம்ராவையும் பூரணமாக நிறைவேற்றுங்கள்(2:196) என்று ஹஜ்ஜையும் உம்ராவையும் இணைத்தே கூறுகிறான் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

உம்ரா பயணம் புனிதப் பயணமாகும் இது சுற்றுலாப்பயணமல்ல என்பதை முதலில் எல்லோரும் மனதில் கொள்ள வேண்டும்.
அது மாத்திரமின்றி ஹஜ் மற்றும் உம்ரா கடமைகள் இடங்களோடு சம்பந்தப் பட்டவையாகும். இந்த கடமையை நிறைவற்ற எமது நாட்டிலிருந்து செல்வது மிகவும் கடினமான அல்லது செலவுத்தனமிக்க ஒன்றென நாம் புரிந்து வைத்துள்ளோம். அதனாலேயே முகவர்களையும் வழிகாட்டிகளையும் தேடியலைய வேண்டியுள்ளது.

மார்க்கம் என்ற பெயரில் நடக்கும் ஆயிரமாயிரம் பித்அத்களும் பித்தலாட்டங்களும் அதிகரித்துள்ள இந்த காலப்பகுதியில் வியாபாரங்களாகவும் ஒரு சில மார்க்க விடயங்கள் மாறிப்போய்விட்டன என்பது யாரும் மறுத்திடாத உண்மை. நாம் நம்மை திருத்திக் கொள்ளாதவரை இந்த பிடியிலிருந்து மீளமுடியாது. இப்படியான ஒருவியாபரங்களில் ஒன்றுதான் உம்ரா புனிதப்பயணம் ஆகும்.

இலங்கையில் நுாற்றுக்கணக்கான முகவர்களும் அதன் சப் ஏஜெண்ட் களும் வழகாட்டி எனும் மௌலவிமார்களும் இருக்கின்றார்கள். இவர்கள் இந்த வியாபாரத்தை வசதி செய்வது எப்படியென்றால்,

தலைசிறந்த 5 நட்சத்திர ஹோட்டல்களில் தங்குமிடம்,
இருக்கை, சாப்பாடு,
குறைந்த விலை,
ஹரமுக்கு பக்கத்தில் ஹோட்டல் வசதி,
முக்கிய இடங்களை பார்க்க செல்லுதல் இன்னும் பல... என்றுதான். 

உண்மையில் புனித யாத்திரை செல்வதற்கு ஏன் இவ்வளவு சொகுசு வசதி அல்லாஹ்வுக்காக செல்கிறோம். நட்சத்திர ஹோட்டலில் தங்க செல்லவில்லை, இதுவெல்லாம் எதற்காக இது பாரிய மாபியா வியாபாரம் கமிசன் வியாபாரம் எல்லாவற்றிலும் கைவத்த எம்மவர்கள் மார்க்கத்திலும் கைவைத்து விட்டனர். உம்ரா  என்பது 

1.கிட்டத்தட்ட 4 மணி நேர அமல், 

2.நிய்யத்துடன் இஹ்றாம் கட்டி தவாப் செய்து சபா மர்வா தொங்கோட்டம் ஓடி முடி கத்தரித்தல் இவ்வளவும்தான் இதற்கு எதற்கு இந்த வீன் விளம்பரங்கள்.

 காரணம் இது ஒரு வியாபாரம் உம்ரா பரவாயில்லை ஹஜ்ஜில்தான் அதில் லாபமாம் அதிகமாம். காரணம் அவ்வளவு மோசடி மினாவில் தரிப்பது என்று சொல்லி அசீசியாவில் தங்குவது போன்ற மோசடி செயல்கள். மார்க்கத்தில் இல்லாதவற்றை செய்ய சொல்லுதல் கூட்டிச் சென்ற பிறகு அங்கு பித்தலாட்டம் முடி கத்தரிப்பதில் இருந்து பேரித்தம்பழம் வாங்கும் வரைக்கும் கமிசன் வியாபாரம் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.

பொறுப்புள்ள அதிகாரிகள் இது குறித்து கவனம் எடுங்கள், அல்லாஹ்வுக்காக இந்த கமிசன் வியாபாரத்திலிருந்து எமது சமூகத்தை பாதுகாப்போம் கண்ணியமிக்க உலமாக்கள் குறைந்த செலவில் ஒரு ஏழை உம்ராவுக்கு செல்லக்கூடிய வழியை வகுக்க திட்டமிடுவோம். நல்லதை செய்வோம் இறையருள் பெறுவோம்.
இன்ஷா அல்லாஹ் துஆ செய்வோம்.

Author: verified_user

0 comments: