மனைவியோடு சண்டையிட்டு மனைவியின் தலையை மொட்டையாக்கிய கணவன் கைது

Published On Saturday, 21 January 2017 | 14:47:00

(எப்.முபாரக்) திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனது மனைவியோடு சண்டையிட்டு மனைவியின் தலைமுடியினை சிரைத்த நபர் ஒருவரை அடுத்த மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் நேற்று வெள்ளிக்கிழமை(20) உத்தரவிட்டார்.

வாழைச்சேனை, மீராவோடை பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் தனது மனைவி வேறு ஒரு நபருடன் தொடர்பு வைத்துள்ளதை அறிந்து சந்தேகத்தில் தாக்கியுள்ளதோடு, தலை முடியினையும் வெட்டி மோட்டையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேக நபர் மூதூர் பகுதியில் வாடகைக்கு வீடு ஒன்றில் வாழ்ந்து வந்த நிலையிலே இவ்வாறு மனைவியோடு சண்டையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேக நபரை பொலிஸார் வியாழக்கிழமை (19) கைது செய்துள்ளதாகவும் வெள்ளிக்கிழமை (19) பொலிஸார் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved