வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்…

Published On Friday, 20 January 2017 | 01:15:00

இன்று(20-1-2017) முதல் மழையுடன் கூடிய காலநிலையை எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விஷேடமாக நாட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களுடன், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழைத்தூறல் ஒரு சில முறை காணப்படும்.
மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் நாட்டில் சில பிரதேசங்களில் காலை நேரத்தில் பனிமூட்டம் காணப்படக்கூடும்.
இதனுடன் நாட்டின் ஊடாக இடைக்கிடையில் வீசும் காற்று, மணிக்கு 50 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved