அல்லாஹுடைய மாளிகைக்­கு உதவுவீர்களா சகோதரர்களே..... அதிகம் பகிர்ந்து கொள்ளுங்கள்

Published On Wednesday, 18 January 2017 | 20:34:00

*அன்பின் இஸ்லாமிய உறவுகளே!*
ஏறாவூர் நகர் எல்லைக்குள் காணப்படும் ஜூம்ஆ பள்ளிவாயல்கலுள் வாளியப்பா ஜூம்ஆ பள்ளிவாயலும் ஒன்று. இப்பள்ளிவாயல் எவ்வித நிரந்தர வருமானமும் இன்றி மகல்லாவாசிகளின் சந்தா பணத்தில் இயங்கி வருகின்றது.

இப்பள்ளிவாயல் மிகவும் பழமையான ஏழ்மையான மக்களை கொண்ட பல அத்தியவசியத் தேவைகளை உடைய பள்ளிவாயல். இப்பள்ளிவாயலில் பல குறைபாடுகள் காணப்பட்டாலும் அவற்றினை நிவர்த்தி செய்ய போதுமான நிதி வளம் இன்மையால் தனவந்தர்கள், அரசியல் பிரமுகர்களின் உதவியுடன் கட்டம் கட்டமாக ஒவ்வொரு பகுதியும் மிகவும் சிறப்பாக நிறைவு செய்யப்பட்டு வருகின்றது .


அந்த வகையில் மாரிகாலங்களில் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு ஏதுவாக தனவந்தர்கள், கிழக்கு  மாகாண கெளரவ முதலமைச்சர் ஆகியோர்களின் நிதி உதவியுடன் ஒருபகுதி கட்டுகள் கட்டப்பட்டு மணல் இடப்பட்டு மிகவும் சிறப்பாக பூரணப்படுத்தப்பட்டுள்ளது.

அல்ஹம்துலில்லாஹ்

இம் மையவாடியின் இரண்டாம் கட்டமாக உள்ளக மின்னிணைப்பு, மின் குமிழ் பொருத்துதல் இவ்வேலை  திட்டத்திற்கு கிழக்கு மாகாண கெளரவ உறுப்பினர் அல்ஹாஜ் MS சுபைர் (BA) அவர்களினால் ரூபாய் ஒரு இலட்சம்  நிதி ஒதுக்கீடு வழங்கி ஒருபகுதிக்கான வேலைத்திட்டம் முழுமை அடைந்துள்ளது.

அல்ஹம்துலில்லாஹ்
அன்பின் தனவந்தர்களே!

இம் மையவாடிக்கான மின் குமிழ் பொருத்தும் வேலைத்திட்டம் முழுமை பெறாத காரணத்தினால் ஒரு பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகின்றது.

இவ்வேலை திட்டத்தினை முழுமை அடையச் செய்ய இன்னும் 6 மின் குமிழ்கள் தேவைப்படுகின்றது.

ஒன்றின் விலை ரூபாய் 9750 ஆகும்.

எனவே தனவந்தர்களாகிய உங்களின் உதவிகளை மிகவும் எதிர்பார்க்கின்றோம். ஸதக்கத்துல் ஜாரியா என்ற அடிப்படையில் இம்மின் குமிழ்களை பெற்றுக் கொள்ள உதவுமாறு தனவந்தர்களிடம் மிகவும் வினயமாக கேட்டுக் கொள்கின்றோம்.

*நிர்வாகம்*
* வங்கி விபரம் *

Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved