யாழ்.வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்!

Published On Wednesday, 18 January 2017 | 10:51:00

ஒரே பிரசவத்தில் இரு ஆண் குழந்தை மற்றுமொரு பெண் உட்பட மூன்று குழந்தைகள் பிரசவிக்கப்பட்ட சம்பவம் ஒன்று யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை விடுதி 22 ல் சத்திரசிகிச்சையின் மூலம் 3 குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளன. மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

மகப்பேற்று பெண்ணியல் நிபுணர் கே. சுரேஸ்குமார் குறித்த சத்திரசிகிச்சையினை மேற்கொண்டுள்ளார்.
ஊர்காவற்துறை பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த வசீகரன் காயத்திரி தம்பதியினருக்கே இந்த மூன்று குழந்தையும் பிறந்துள்ளது.
3 குழந்தைகள் நேற்று; 16 ஆம் திகதி நள்ளிரவு 11.28 மணியளவில் பிறந்துள்ளன.
இரு ஆண்குழந்தையும் ஒன்று பெண்குழந்தையுமாக பிறந்துள்ளன. நள்ளிரவு 11.27 மணியளவில் இரண்டு ஆண் குழந்தைகளும், 11.28 மணியளவில் ஒரு குழந்தையும் பிறந்துள்ளது.
1கிலோவும் 900 கிராம் மற்றைய குழந்தை 1கிலோ 560 கிராம் அடுத்த குழந்தை 2கிலோவும் 100 கிராம் எடையிலும் பிறந்துள்ளன.
மூன்று குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் , கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரும் இதேபோன்று ஒரே சூலில் மூன்று குழந்தைகள் சத்திரசிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சத்திரசிகிச்சையினை குறித்த வைத்திய நிபுணரே மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved