Monday, 16 January 2017

செல்பி அடிமைகளுக்கு எச்சரிக்கை - பல்கலைக்கழக மாணவியின் உயிரை பறித்த 'செல்பி' மோகம்!

திரு­கோ­ண­மலை வெருகல் பிர­தேச செய­லாளர் பிரிவில் பள்­ளித்­தோ­ழி­க­ளுடன் செல்பி எடுக்க முனைந்த வாழைத்­தோட்­டத்­தைச்­ சேர்ந்த பல்­க­லைக்­க­ழ­கத்திற்கு தெரி­வான மாணவி ஒருவர்  கடலில் தவறி விழுந்த தனது நண்­பியைக் காப்­பாற்­றச்­சென்று மர­ண­மான துயரச் சம்­பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் பொங்கல் தினமான நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தினால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் மர­ண­மா­னவர்,வெருகல் பிர­தேச செய­லா­ளர்­ பி­ரிவின் வாழைத்­தோட்ட கிரா­மத்­தைச் சேர்ந்த செல்­வ­சிங்கம் பிர­தீபா (வயது 21) என்ற மாணவியாவார்.
தனது க.பொ.த.உயர்தரத்தை  வாழைச்­சேனை கறு­வாக்­கேணி விக்கினேஸ்­வ­ராவில் கற்ற இம்­மா­ணவி 2015 பரீட்­சையில்  கலைப்­பி­ரிவில் இரண்டு ஏ ,பி சித்­தி­க­ளைப்­பெற்­ற­தா­கவும் கிழக்கு பல்­க­லைக்­க­ழத்­திற்கு தெரி­வான இவர் எதிர்வரும் 19 ஆம் திகதி பல்­க­லைக்­க­ழகம் செல்ல விருந்­த­தா­கவும் இவ­ரைக்­கற்­பித்த இடை நிலைப்­பா­ட­சாலை அதிபர்  க.சொக்­க­லிங்கம் தெரி­வித்தார்.
வாழைத்­தோட்­டத்­திற்கு அருகில் உள்ள புன்­னை­ய­டி­கி­ரா­மத்தின் கடற்­ப­குதியில் அமைந்­துள்ள மலைக்­குன்றில் நின்று தனது இரு தோழி­க­ளுடன் செல்பி எடுக்க முற்­பட்­ட­போது  இவ­ரது நண்பி கால்­த­வறி கடலில் விழந்­துள்ளார். அவ­ரைக்­காப்­பாற்ற உடன்  குதித்த பிர­தீ­பாவே இறந்­துள்ளார்.
கடலில்  விழுந்த இரு­வ­ரையும் காப்­பாற்றி  வைத்­தி­ய­சாலைக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்­ட­போதும் முயற்சி பய­ன­ளிக்­கா­மை­யினால் தவறி விழுந்­த­வரை காப்­பாற்­று­வ­தற்­காக பாய்ந்த பிர­தீபா உயிரிழந்ததாகவும். ஆனால் தவறி விழுந்த நண்பி உயிர் பிழைத்­துள்­ள­தா­கவும்  பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். 
பிரேத பரி­சோ­த­னைக்­காக மாணவியின் சடலம் திரு­கோ­ண­மலை பொது வைத்­தி­யசாலைக்கு கொண்டு வரப்­பட்டு விசா­ர­ணைகள் இடம்­பெற்ற பின்னர் சடலம் உறவினர்களிடம் கைய­ளிக்­கப்படவுள்ளது.
இவ­ரைப்­பற்றி மேலும் கருத்து வெளி­யிட்ட வழைத்­தோட்­டத்­திற்கு அருகில் உள்ள துவா­ரகா வித்­தி­யா­லய முன்னாள் அதிபர் சொக்­க­லிங்கம்  குறிப்­பி­டு­கையில்,.
 குறித்த மாண­வியின் குடும்­பத்­தினர் மிகவும் வறியவர்கள் என்பதுடன் இம்­மா­ணவி ஆரம்­பக்­கல்­வியை வழைத்­தோட்டப்பாட­ச­லையில் கற்­று­வந்த நிலையில் க.பொ.த(சா.த)த்தில் கல்வி கற்க எமது துவா­ரகா வித்­தி­யா­லத்தில் இணைந்தார். இவர் சிறந்த விளை­யாட்டு வீராங்­க­னை­யாக திகழ்ந்து அகில இலங்கை ரீதியில் ஓட்­டங்­களில் சாத­னைப்­ப­டைத்த திற­மை­சா­லி­யாவார்.
இந்­நி­லையில் சிறந்த பெறு­பேற்றை க.பொ.த சாத­ரண தரத்தில் பெற்ற இவர்  வாழைச்­சேனை சென்று  கறு­வாக்­கேணி விக்­னேஸ்­வ­ராவில் க.பொ.த. உயர்தரத்தில் உற­வி­னர்­களின் வீட்டில் தங்கி நின்று  கற்று சிறந்த பெறு­பேற்றை பெற்ற நிலையில் பல்­க­லைக்­க­ழத்­திற்கு நுழை­வ­தற்­கான சகல ஏற்­பாட்­டையும் பூரத்தி செய்­தி­ருந்தார். எதிர் வரும் 19ஆம்திகதி பல்­க­லைக்­க­ழகம் செல்ல விருந்­த­தா­கவும் உற­வி­னர்கள் தெரி­வித்­தனர். சுனாமி மற்றும் யுத்­தத்­தினால் மிகவும் பாதிப்­புக்­க­ளைச்­சந்­தித்த இக்­கி­ராமம் மீள முயற்­சிக்­கையில் எட்­டாக்­க­னி­யான பட்­ட­தா­ரியை கிராமம் இழந்­துள்­ளது எனவும் குறிப்­பிட்டார்.  
 வாழைச்­சே­னையில், இவ­ரது க.பொ.த. உயர்தர வகுப்பின் வகுப்­பா­சி­ரி­ய­ரா­க­வி­ருந்த அ.சூரிய காந்தன் குறிப்­பி­டு­கையில், இந்த மாணவி மிகவும் அமை­தி­யா­னவர்  என்­ப­துடன் சமூக நெறி­பி­றழ்­வில்­லா­தவர். 
இக்­கா­லத்தில் இவ்­வா­றானவர்களை  காண்பது குறைவாகும். பிரத்தியேகமாக இசைத்துறையிலும், விளையாட்டிலும் ஆர்வமுள்ளவர். பல போட்டிகளில் பங்குபற்றி பதக்கங்களை பெற்றவர். நான் அவருக்கு கற்பிக்க வில்லை. ஆனால் வகுப்பாசிரியராக கடமையாற்றியுள்ளேன். அவரது உயர் கல்வியைக்கற்பதிலும் வறுமை காரணமாக சிரமப்பட்டே கற்று 2 ஏ,பி சித்தியை 2015இல் பெற்றிருந்தார் எனவும் குறிப்பிட்டார்.

Author: verified_user

0 comments: