அரிய வகை நோய் – மர மனிதனின் சுவாரஸ்ய கதை! (படங்கள்)

Published On Tuesday, 17 January 2017 | 14:12:00

உலகில் பல அரிய வகை நோய்கள் உள்ளன. அதில் ஒன்று தான் ‘எபிடெர்மோடிஸ்ப்ளாசியா வெருசிஃபோர்மிஸ்’. வங்காளத்தில் உள்ள ஒருவர் இந்த அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு, மர மனிதன் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார்.
இதுவரை இந்த நோய் குணப்படுத்த முடியாத ஒன்றாக இருந்தது. ஆனால் தற்போதைய நமது தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் முன்னேற்றத்தால், இந்த மனிதருக்கு உள்ள நோய் முற்றிலும் குணப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மர மனிதரின் பெயர் அபுல் பஜந்தர். இந்த நிலையால் இவர் சாதாரண மனிதனின் வாழ்க்கையை வாழ முடியாமல் தவிர்த்து வந்தார். தற்போது இந்நோய் குணமாகியிருப்பது, உண்மையிலேயே சந்தோஷத்தை அளிக்கிறது. இந்த மர மனிதனின் சுவாரஸ்ய கதையைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.
அரிய மரபணு நிலை
‘எபிடெர்மோடிஸ்ப்ளாசியா வெருசிஃபோர்மிஸ்’ என்பது மிகவும் அரிய மரபணு நிலையாகும். இந்நிலையினால், மனித உடலில் மரக்கட்டைகளைப் போன்று பெரிய பெரிய மருக்கள் உருவாகியிருக்கும். துரதிர்ஷ்டவசமாக, அபுல் பஜந்தர் இந்த அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுவிட்டார்.

வங்காள அரசின் இலவச சிகிச்சை
இவரது இந்த அரிய நிலை மிகவும் பிரபலமாகியப் பின், வங்காள அரசாங்கத்தால், இவருக்கு இலவச சிகிச்சை வழங்கப்பட்டது. இவருக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சையால், இவரும், இவரது மனைவி மற்றும் குழந்தையும் பல வருடங்களாக மருத்துவமனையிலேயே தங்கியிருந்தனர்.

16 அறுவை சிகிச்சைகள்
இந்த நிலையில் இருந்து சரி செய்வதற்கு அபுல் பஜந்தருக்கு 16 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் இவரது குழந்தையை தற்போது அவரால் தூக்கி கொஞ்ச முடிகிறது.

இரு வேறு சிறு அறுவை சிகிச்சைகள்
இதுப்போன்று ஒரு அரிய நோய்க்கு சிகிச்சை அளித்து முழுமையான குணமாகியிருப்பது, அறிவியல் வரலாற்றில் ஒரு மறக்க முடியாத மைல் கல்லாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் அபுல் முற்றிலும் குணமாவதற்கு இன்னும் இரண்டு அறுவை சிகிச்சைகள் தேவைப்படுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சாதாரண வாழ்க்கையை வாழ ஆசைப்படும் அபுல்
இவரது கதை உலகம் முழுவதும் வைரல் ஆன பின்பு, உலகின் பல பகுதிகளில் இருந்தும் இவர் நன்கொடைகளைப் பெற்றார். இந்த நன்கொடைகளை வைத்து, ஒரு சிறு தொழில் ஆரம்பிக்க போவதாக திட்டம் தீட்டியுள்ளார். இவரது வாழ்க்கை சிறப்பாக அமைய நாமும் இவரை வாழ்த்துவோம்.


Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved