இலங்கையில் ஓரினச் சேர்க்கை சட்டபூர்வமாக்கபடுகிறது. - அமைச்சரவைப் பத்திரம் தயார்!

Published On Tuesday, 17 January 2017 | 14:09:00

இலங்கையில் ஓரினச் சேர்க்கையின் தடையினை நீக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 1842 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 175 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த தடையினை நீக்கவே அரசாங்கம் தற்போது முயற்சிகளை மேகொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இது குறித்த அமைச்சரவை பாத்திரமானது இன்று அல்லது அடுத்த வாரமளவில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவால் அமைச்சரவையில் முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் இலங்கை அரசியல் சாசனத்தின் படி நடைமுறையில் ஓரினச் சேர்க்கை என்பது தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SOURCE NEWS
http://sinhala.adaderana.lk/webgossip/home-sexual-sri-lanka/
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved