அன்னாசிப்பழத்தை அதிகம் சாப்பிடுவீங்களா? இதை கண்டிப்பா தெரிஞ்சிகோங்க!

Published On Friday, 20 January 2017 | 22:10:00

தனித்துவமான நிறம், வடிவம் மற்றும் முற்கள் நிறைந்த இலைகளை கொண்ட அன்னாசிப் பழத்தில் உள்ள மஞ்சள் நிறம் தான் தேன் போன்ற இனிப்புச் சுவையைக் கொடுக்கிறது
பல்வேறு ஊட்டச்சத்துக்களை அதிகமாக கொண்டுள்ள இந்த அன்னாசிப் பழமானது பல மருத்துவகுணங்களை கொண்டுள்ளது.
ஆனால் இந்த பழத்தை அதிகமாக சாப்பிடுவதால், பல பக்க விளைவுகளும் ஏற்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
அன்னாசிப் பழத்தை அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் பக்க விளைவுகள்
  • அன்னாசிப்பழம் அதிகமாக சாப்பிடுவதால், சிலருக்கு லேசான அலர்ஜிகள், வீக்கம் மற்றும் தொண்டையில் ஒருவித கூச்ச உணர்வுகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
  • கருவை சுமக்கும் பெண்கள் அன்னாசிப் பழத்தை சாப்பிடக் கூடாது. ஏனெனில் கருச்சிதைவில் பல இடர்பாடுகளை அன்னாசிப் பழம் ஏற்படுத்துகிறது.
  • அன்னாசிப்பழத்தை நாம் அதிகமாக் சாப்பிடும் போது, அது இரைப்பைக்கு சென்று குடலுக்குள் அல்கஹாலாக மாறி விடுகிறது. இதனால் அது கீல்வாதம் மற்றும் முடக்குவாதம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
  • அன்னாசிப்பழத்தில் இயற்கையான சர்க்கரை அதிகமாக் அடங்கியுள்ளதால், இதை அதிகமாக சாப்பிடும் போது, அதில் உள்ள சர்க்கரை நமது ரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை அதிகரிக்க வைத்து, நீரிழிவு நோயை ஏற்படுத்துகிறது.
  • அன்னாசிப்பழத்தில் ப்ரோம்லைன் அதிகம் உள்ளதால், ஆன்டி-பயாடிக்ஸ் மற்றும் வலிப்புத் தடுப்பு மருந்துகளை பயன்படுதுபவர்கள் அன்னாசிப் பழத்தை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
  • பழுக்காத அன்னாசிப்பழத்தை சாப்பிட்டாலோ அல்லது ஜூஸ் போட்டு குடித்தாலோ அது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். ஏனெனில் அது நச்சுத்தன்மையை உண்டாக்கி, கடுமையான வாந்தியை ஏற்படுத்துகிறது.
  • அன்னாசிப்பழத்தை அதிகமாக சாப்பிட்டால், அசிடிட்டி பிரச்சனை அதிகமாகி, இதனால் தொண்டையில் சளி தொல்லையை ஏற்படுத்தி, வாய் மற்றும் தொண்டையில் ஒருவித ஊறும் உணர்வை ஏற்படுத்துகிறது.
  • அன்னாசிப்பழத்தில் உள்ள ஒரு முக்கிய பொருளான ப்ரோம்லைன், புரதத்தை உடைக்கும் தன்மைக் கொண்டதால், இது எரிச்சலை ஏற்படுத்தி, தோல் அழற்சி மற்றும் வயிற்று வலியை உண்டாக்குகிறது.
  • அன்னாசிப் பழத்தை அதிகமாக சாப்பிட்டால், நமது பற்களில் கரைகளை ஏற்படுத்தி, பற்கள் எனாமலின் மீது எதிர்மறையான தாக்கங்களை உண்டாக்கி, ஈறு அழற்சி பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved