ஒரு ரூபாய் வரதட்சணை வாங்கிய ஒலிம்பிக் விளையாட்டு வீரர்

Published On Monday, 16 January 2017 | 17:09:00

கடந்த 2014-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் வெண்கலப்பதக்கம் வென்றார். இவருக்கும், ஹரியானா மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ஜெய்பகவான் சிங்கின் மகள் ஷீடல் சர்மா என்பவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்காக மணப்பெண் வீட்டிலிருந்து வெறும் ஒரு ரூபாய் மட்டும் வரதட்சணையாக யோகேஷ்வர் பெற்றுள்ளார். யோகேஷ்வருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளார்கள் என்றும், அவர்களது திருமணத்திற்காக யோகேஷ்வரின் பெற்றோர்கள் சிரமப்பட்டு வரதட்சணை அளித்தனர். இதனால் மிகுந்த வருத்தமடைந்த அவர், தனது திருமனத்திற்கு பெண் வீட்டார் சிரமப்படக்கூடாது என இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தான் வளரும் போதே, மல்யுத்தத்தில் சாதிப்பது, மற்றும் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்து கொள்வது என இரண்டு முடிவுகள் எடுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய தூதராக பாலிவுட் நடிகர் சல்மான்கான் நியமிக்கப்பட்டதற்கு யோகேஷ்வர் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும், அவர் இரண்டு முறை ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் பதக்கம் வென்றவர் குறிப்பிடத்தக்கது.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved