குவைத்தில் வெளிநாட்டினருக்கான மருத்துவக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டன.

Published On Wednesday, 11 January 2017 | 13:19:00


குவைத் அரசு மருத்துவ மனைகளில் வழங்கப்படும் அனைத்து வகை சிகிச்சைகளுக்கான கட்டணமும் குவைத் வாழ் வெளிநாட்டினருக்கும், விசிட்டிங் விசாவில் வருபவர்களுக்கும் உயர்த்தப்படவுள்ளது என அந்நாட்டின் சுகாதார அமைச்சர் டாக்டர் ஜமால் அல் ஹர்பி அவர்கள் அறிவித்துள்ளதுடன் தனியார் மருத்துவ மனைகளின் சேவை கட்டணங்களுடன் ஒப்பிடும்போது 20 சதவிகிதம் குறைவான கட்டணமே என்றும் நியாயப்படுத்தினார்.

இந்த கட்டண ஏற்றம் எதிர்வரும் பிப்ரவரி மாதம் மத்தியிலிருந்து அமலுக்கு வருவதுடன் தனியார் மருத்துவ மனைகளுக்கான மின்சார கட்டணமும் எதிர்வரும் மே மாதம் முதல் ஏற்றப்படவுள்ளதால் தனியார் மருத்துவமனைகளின் கட்டணமும் உயரவே வாய்ப்புள்ளது.

அதுபோல், அரசு மருத்துவ மனைகளில் உள்ள அறைகளின் கட்டணமும் குவைத் நாட்டவர்களுக்கும், வெளிநாட்டினருக்கும் உயர்த்தப்படவுள்ளது. குவைத்தியர்களும், அகதிகளும் இனி தினசரி அறை வாடகையாக 1 குவைத் தீனாருக்கு பதில் 3 தீனார்களும், வெளிநாட்டினர் 15 தீனாருக்கு பதில் கூடுதலாக 15 தீனார்களும் செலுத்த வேண்டும்.

Source: Kuwait Times
தமிழில்: நம்ம ஊரான்
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved