சொடக்கு எடுப்பது சரியா? அதனால் உடலில் நடக்கும் மாற்றம் என்ன?

Published On Friday, 20 January 2017 | 22:18:00

நாம் அனைவரும் கைகள், கால்கள், கழுத்து இது போன்ற பகுதிகளில் சொடக்கு எடுப்பது இயல்பான விஷயமாகும்.
ஆனால் அப்படி இருக்கும் போது, நாம் சொடக்கு எடுத்தால் ஏன் சத்தம் வருகிறது? சொடக்கு எடுப்பது நல்லதா? அல்லது அது நமது உடல் நலத்திற்கு தீங்குகளை தருமா?
இது போன்ற கேள்விகளுக்கு உங்களிடம் பதில் உள்ளதா? இதோ அதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
சொடக்கு எடுக்கும் போது சத்தம் வருவது ஏன்?
நமது உடம்பில் இருக்கும் மூட்டுறைப்பாய திரவமானது, மூட்டுகளில் உராய்வுகள் ஏற்படாமல் இயங்க வைக்கும் பணியைச் செய்கிறது.
இந்த திரவம் இருக்கும் இடத்தின் குழியில் கேஸ் அதிகமாக நிறைந்து இருக்கும். எனவே தான் சொடக்கு எடுக்கும் போது சப்தம் ஏற்படுகிறது.
சொடக்கு எடுப்பது நல்லதா?
சொடக்கு என்பது நமது உடம்பில் மூட்டுறைப்பாய திரவம் இருக்கும் குழி போன்ற வெற்றிடத்தில் ஏற்படும் ஒரு தாக்கமாகும்.
சொடக்கு எடுப்பதில் ஆபத்து உள்ளதா என்று ஆய்வின் மூலம் ஆராய்ச்சி செய்த போது, அதில்
சொடக்கு எடுப்பதால் நமது கைகளுக்கு பக்கவிளைவுகள் அல்லது தீய தாக்கம் ஏதும் ஏற்படுவதில்லை என்பது தெரியவந்துள்ளது.
மேலும் சொடக்கு எடுப்பதால், நமது உடலில் இருந்து ஒருவித இலகுவான தன்மையை மட்டுமே உணர முடிகிறது என்று கூறுகின்றார்கள்.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved