மோடியின் அராஜகம் முஸ்லிம்கள் மீதும் - ஹஜ் பயணிகளுக்கான மானியம் குறைக்கப்படுகிறது!

Published On Friday, 13 January 2017 | 22:33:00

இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றான ஹஜ் பயணத்துக்கான மானியத்தை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றான ஹஜ் பயணத்துக்கு இந்தியாவில் இருந்து கடந்த ஆண்டு 1 லட்சத்து 36 ஆயிரத்து 20 பேர் சென்று வந்தனர்.

இந்த ஆண்டு ஹஜ் பயணத்துக்கான இந்தியர்கள் எண்ணிக்கையை 1 லட்சத்து 70 ஆயிரத்து 520 ஆக சவுதி அரோபியா அரசு உயர்த்தி உள்ளது. இதன் மூலம் இந்தாண்டு இந்தியாவில் இருந்து கூடுதலாக 34 ஆயிரத்து 500 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. இது நடுத்தர இஸ்லாமியர்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது.

இந்த மானியம் வினியோகம் காரணமாக மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.650 கோடி வரை செலவு ஏற்படுகிறது. இந்த மானியத் தொகை ஒதுக்கீடு பற்றி கடந்த 2012-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு ஒரு உத்தரவை வெளியிட்டது.

ஹஜ் பயணத்துக்கு வழங்கப்படும் ரூ.650 கோடி மானியத்தை கொஞ்சம், கொஞ்சமாக குறைக்க வேண்டும். 2022-ம் ஆண்டுக்குள் அந்த மானியம் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன் பேரில் ஹஜ் பயணத்துக்கான மானியத்தை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர 6 பேர் கொண்ட கமிட்டியை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

மத்திய சிறுபான்மை நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வியும் உயர் மட்டக்குழு ஒன்றை அமைத்து இதுபற்றி ஆய்வு செய்து வருகிறார்.

இந்த நிலையில் அகில இந்திய மஜ்லிஸ்-இ- இத்திகா துல் முஸ்லிமான் கட்சி தலைவரும் எம்.பி.யுமான அசதுதீன் உவைசி நிருபர்களிடம் கூறுகையில், “மத்திய அரசு வழங்கும் ஹஜ் மானியம் முஸ்லிம்களுக்கு தேவை இல்லை. அந்த மானியப் பணத்தில் ரூ.450 கோடி இந்திய விமான நிறுவனங்களுக்கு தான் செல்கிறது” என்றார்.

எனவே ஹஜ் பயண மானியம் குறைக்கப்பட்டு 2022-க்குள் அது முழுமையாக நீக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.
(மாலைமலர்)
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved