வயது ஒரு தடையல்ல என நிருபித்த 94 வயது பாட்டி ! பட்டம் பெற்று சாதனை!

Published On Saturday, 21 January 2017 | 10:15:00


ஹவாய் தீவில் வாழும் அமி கிரெட்டன் (Amy Craton) என்ற 94 வயது பெண்மணி ஆன்லைன் வழியாக இரண்டரை ஆண்டுகள் படித்தும், ஈமெயில் போன் வீடியோ கான்பரன்சிங் என ஆன்லைன் வழியாகவே பேராசிரியர்களிடம் படிப்பு சம்பந்தமான சந்தேகங்களை தீர்த்துக் கொண்டும் தேர்வு எழுதி இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். பயணம் செய்ய இயலாத நிலையிலள்ள இவருக்கு பல்கலைகழக நிர்வாகமே ஹோனலூலூ நகருக்கு நேரில் வந்து பட்டத்தை வழங்கிச் சென்றது.

1962 ஆம் ஆண்டு கல்லூரிக்கு சென்று வந்த நிலையில் திருமணமாகி, 4 குழந்தைகளுக்கு தாயாகி பின்பு விவாகரத்து பெற்று என பல்வேறு சோதனைகளால் படிப்பை தொடர இயலாதவர், பழைய கல்வி முறையில் பள்ளிப்படிப்பை பயின்ற ஒருவர் தற்போது சுமார் 50 ஆண்டுகள் கழித்து நவீன மின்னனு சாதனங்களின் துணை கொண்டு படித்து பட்டம் பெற்றுள்ளதும் அதுவும் 94 வயதான ஒருவர் பட்டம் பெற்றது தங்களது பல்கலைகழகத்திற்கு பெருமை சேர்ப்பதாக தெரிவித்துள்ளது சதர்ன் நியூ ஹாம்ப்ஷயர் பல்கலைக்கழகம்.

மேலும் தனது முதுகலை பட்டப்படிப்பை தொடரப் போவதாகவும், குழந்தைகளுக்கான புத்தகங்கள் எழுதப்போவதாகவும் தெரிவித்துள்ளார் அமி கிரேட்டன். அதேவேளை தொலைக்காட்சி முன் அமர்ந்து கொண்டு வெறும் சோப்பு விளம்பரங்களை பார்ப்பதில் தனக்கு விருப்பமில்லை என்றும் என்னுடைய விருப்பப்படி என் வாழ்க்கையை வாழ விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார் இந்த பட்டதாரி.

Source: Inside Edition / Msn
தமிழில்: நம்ம ஊரான்
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved