கடன் சுமையால துபாயில் 4 மாதங்களாக காருக்குள் 'வாழும்' பிரிட்டீஷ் பெண் !

Published On Saturday, 21 January 2017 | 10:22:00


இந்திய வம்சாவளியை சேர்ந்த 42 வயது பிரிட்டீஷ் பெண் ஒருவர் கடன் சுமையால் காருக்குள்ளே உறங்கி எழும் அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒரு நேரத்தில் இவர் சுயமாக வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி பலருக்கும் வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தி தந்தவர் இன்று அவருக்கே வேலையின்றி தவிக்கின்றார்.

கடந்த செப்டம்பர் மாதம் துபையில் தான் நடத்தி வந்த வேலைவாய்ப்பு ஆலோசணை நிறுவனத்தை தொடர்ந்து நடத்த இயலாததால் மூடிவிட்டு மீண்டும் பிரிட்டன் திரும்புவதற்காக வந்தவரால் மீண்டும் திரும்ப இயலாத அளவிற்கு எதிர்பாராமல் ஏற்பட்ட கடன் சுமை.

கேன்சர் நோயாளி ஒருவரின் சிகிச்சைக்காக கொடுத்த கடன் 40,000 திரும்ப கிடைக்காத நிலையிலும், கார் வாடகை நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தொகை 10,000 திர்ஹத்திற்கு மேல் சென்று விட்டதாலும், வேலையோ வருமானமோ இல்லாததால் வீடு வாடகைக்கு எடுக்க இயலாததாலும், முறையான விசா இன்றி சட்ட விரோதமாக தங்கியுள்ளதால் செலுத்த வேண்டிய அபராதங்கள் ஒருபுறம் வளர்ந்து கொண்டுள்ள நிலையிலும், பலமுறை உதவிய நண்பர்களும் ஒரு கட்டத்திற்கு மேல் அவரது போனையே எடுக்காமல் தவிர்க்கும் நிலை உருவானதாலும் காரே கதியென ஆகிப்போனது அவரது வாழ்க்கை.

கச்சா பார்க்கிங்குகளில் காரை நிறுத்திவிட்டு காருக்குள்ளேயே உறங்கும் இந்தப்பெண் உடை மாற்றவும் சுகாதாரத்திற்கும் ஹோட்டல் பாத்ரூம்களையே பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்த கடினமான நிலையில் அவர் வேண்டுவதெல்லாம் மனித வளத்துறையில் அல்லது விற்பனையாளராக அல்லது பயிற்சியாளராக வேலை ஒன்றே, வேலை கிடைத்தால் என்னுடைய கஷ்டநிலையிலிருந்து மீண்டு விடுவேன் என தன்னம்பிக்கையுடன் பேசுகிறார்.

ஆண்களே தடுமாறும் இத்தகைய சோதனை நிலையை ஒரு பெண் அனுபவித்துக் கொண்டுள்ளது மிக மிகத் துயரமானதே.

Source; News Xpress (Gulf News)
தமிழில்: நம்ம ஊரான்
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved