ஒரு நாளைக்கு 4 கிலோ இறைச்சி, 36 முட்டைகள், 5 லீட்டர் பால் உணவாக உட்கொள்ளும் நபர்!

Published On Saturday, 14 January 2017 | 13:51:00

(அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்) பாகிஸ்தானைச் சேர்ந்த 25 வயது அர்பாப் கிஸெர் ஹயட், 6 அடி 3 அங்குல உயரமும் 431.82 கிலோ எடையும் இருக்கிறார். இவரை ஹல்க் மனிதர் என்று அழைக்கின்றனர். 

உலகின் மிக வலிமையான மனிதர் என்று நிரூபிக்கும் வகையில், சமீபத்தில் ஒரு டிராக்டரைக் கயிற்றால் பிடித்து நகர விடாமல் செய்திருக்கிறார். 

டிராக்டரை எவ்வளவு வேகமாக இயக்கினாலும் பின் சக்கரங்கள் மட்டும் இருந்த இடத்திலேயே சுற்றிக்கொண்டிருந்தன. “இப்படி ஒரு உடல் எனக்கு அமைந்தது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். 

எடை தூக்குதலிலும் மல்யுத்தத்திலும் சாம்பியன் ஆக வேண்டும் என்பதுதான் என் லட்சியம். ஒரு நாளைக்கு 10 ஆயிரம் கலோரிகள் என் உடலுக்குத் தேவைப்படுகின்றன. 

காலை உணவாக 36 முட்டைகள், பகல் 3.5 கிலோ இறைச்சி, ஒரு நாளைக்கு 5 லிட்டர் பால் போன்றவற்றை எடுத்துக்கொள்கிறேன். 

அளவுக்கு அதிகமான எடையால் என் உடலுக்கு இதுவரை எந்த நோயும் ஏற்பட்டதில்லை. எடை எனக்கு ஒருநாளும் சுமையாகத் தெரிந்ததில்லை” என்ற ஹயட், ஏற்கெனவே பாகிஸ்தானில் பிரபலமாக இருக்கிறார். உலக அளவில் வலிமையான மனிதராக வலம் வர வேண்டும் என்று விரும்புகிறார்.
Share this article :


1 comment:

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved