இலங்கை அமைச்சர்களுக்கு மாதாந்தம் 320 இலட்சம், வாகனத்திற்கு 700 இலட்சம்..!! - உண்மைகள் அம்பலம்..!

Published On Friday, 20 January 2017 | 21:13:00

துமிந்த நிசாநாயக்கவின் காரியாலயத்திற்கான மாதாந்த வாடகை 210 இலட்சங்கள், சரத் பொன்சேகாவின் காரியாலய வாடகை 110 இலட்சங்களாகும் என பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நேற்று கொழும்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனைக் கூறினார் தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
அமைச்சர் துமிந்த திசாநாயக்கவின் காரியாலயத்திற்கு மாதாந்தம் 210 இலட்சங்கள் வாடகைப்பணம் கொடுக்கப்பட்டு வருகின்றது.
என்றாலும் கடந்த 8 மாதங்களாக அது செயற்பட வில்லை இதனால் அரசுக்கு 16 கோடி ரூபா வரையிலும் நட்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவற்றினை பொருட்படுத்துவது இல்லை.
இந்த நட்டத்தினை ஈடு செய்ய அரசு குறித்த காரியாலயத்தை விற்க வேண்டும் துமிந்தவோடு சேர்த்து விற்று விட வேண்டும்.
அதேபோல் சரத் பொன்சேகாவின் காரியாலயத்திலும் எந்த விதமான இலாபமும் இல்லை ஆனால் வாடகை மட்டும் 110 இலட்சங்கள். அதேபோல் 700 இலட்சங்களுக்கு வாகனம் கொண்டு வருகின்றார்கள், இது எந்த வகையில் நியாயம்.
இந்த ஆட்சியில் பணத்தை விணாக்கும் தலைவர்களே இருக்கின்றார்கள். அதனாலேயே நாடு வீழ்ச்சியடைந்துள்ளது. பொறுப்பற்ற ஆட்சியே நடந்து வருகின்றது.
கடந்த கால ஆட்சியாளர்கள் துறைமுகங்களை அமைக்கும் போது கொள்ளையிட்டார்கள். ஆனால் இவர்கள் அதனை விற்கும் போது கொள்ளையிட்டு வருகின்றார்கள்.
அநுராதபுர இராஜதானி வீழ்ச்சி பெற்றதைப் போன்ற நிலையே இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டின் பொளுளாதாரம் வீழ்ச்சியடைவது ஆட்சியாளர்களினாலேயே. ஆட்சி வீழ்ச்சியடையும் அறிகுறிகளே இவை.
இவை திருத்தப்பட வேண்டும். நாம் நாட்டை பொறுப்பேற்க தயாராக இருக்கின்றோம் எனவும் அநுர தெரிவித்தார்.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved