மியன்மாரிலிருந்து 3 மாதங்களில் மட்டும் 65 ஆயிரம் முஸ்லிம்கள் வெளியேற்றம்

Published On Friday, 13 January 2017 | 21:13:00

மியன்­மாரில் உள்ள ராக்கைன் மாநி­லத்தில் இரா­ணு­வத்­தி­னரால் கடந்த மூன்று மாதங்­க­ளுக்கு முன்பி­ருந்து முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வரும் இரா­ணுவ நட­வ­டிக்­கை­களின் எதி­ரொ­லி­யாக இது­வரை சுமார் 65 ஆயிரம் ரோஹிங்யா முஸ்­லிம்கள் அங்­கி­ருந்து வெளி­யேறி பங்­கா­ளா­தே­ஷிற்குச் சென்­றுள்­ள­தாக ஐ.நா.தெரி­வித்­துள்­ளது
நாட்டின் எல்லைப் பகு­தி­களில் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டுள்ள வன்­மு­றைகள் குறித்து ஆய்வு செய்யும் வகையில், 12 நாட்கள் விஜயம் மேற்­கொண்டு மியன்­மா­ருக்­கான ஐ.நா. மனித உரி­மைகள் அமைப்பின் தூதுவர் யேங்­கிலி லீ  திங்­கட்­கி­ழமை அங்கு வந்த நிலை­யி­லேயே இந்த தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.
கடந்த வாரத்தில் மாத்­திரம் சுமார் 22 ஆயிரம் பேர் ராக்கைன் மாநி­லத்­தி­லி­ருந்து எல்லை கடந்து சென்­றுள்­ள­தாக ஐ.நா. சபையின் நிவா­ரண அமைப்பு வெளி­யிட்­டுள்ள வாராந்த அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.
இதே­வேளை, ராக்கைன் மாநி­லத்தில் இரா­ணு­வத்­தினர் கொலைகள், பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்கள் மற்றும் கிரா­மங்­களை எரி­யூட்டி நாச­கார செயல்­களில் ஈடு­பட்டு வரு­வ­தாக அங்­குள்ள மக்­களும் அக­தி­களும் குற்றம் சாட்­டி­யுள்­ளனர்.
எனினும் இந்தக் குற்­றச்­சாட்டை மறுத்­துள்ள மியன்மார் அரசின் ஆலோ­சகர் ஆங் சான் சூகி, இவ்­வா­றான வன்­மு­றை­க­ளுக்கு எதி­ராக உரிய நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தாக தெரி­வித்தார்.
இந்­நி­லையில் இரா­ணுவ நட­வ­டிக்­கைகள் தீவி­ர­மாகிக் காணப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­படும் ராக்கைன் மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் தூதுவர் விஜயம் செய்து ஆய்வு செய்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது
விடிவெள்ளி
Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved