துபாய் ஷாப்பிங் திருவிழாவில் 250 கிலோ தங்கக்கட்டிகள் காட்சிக்கு வைப்பு!

Published On Saturday, 21 January 2017 | 10:24:00


துபையில் நடைபெற்று வரும் வருடாந்திர துபை ஷாப்பிங் திருவிழாவை (DSF - Dubai Shopping Festival) சிறப்பிக்கும் வகையில் நேற்று (வெள்ளிக்கிழமை – 20.01.2017) ஒரு நாள் மட்டும் சுமார் 35 மில்லியன் திர்ஹம் மதிப்புள்ள 250 கிலோ தங்க பாளங்களை (250 KG GOLD BARS) பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது

துபையிலுள்ள மால் ஆப் தி எமிரேட்ஸ் (Mall of the Emirates) வளாகத்திலுள்ள ஜம்போ ஸ்டோரில் (Jumbo Stores) காட்சிக்கு வைக்கப்பட்டது. பொதுமக்கள் இந்த தங்க பாளங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனா் இந்தப் படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் என்ற  #jumboisgold ஹேஷ்டேக்குடன் பதிபவர்களில் ஒருவருக்கு 25,000 திர்ஹம் மதிப்புடைய தங்கத்தால் செய்யப்பட்ட 'பிளே ஸ்டேஷன் 4' பரிசாக (Dh25,000 worth of limited edition solid gold PlayStation 4) வழங்கப்பட்டுள்ளது..

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved