பகிருங்கள் - குடிநீர்த் தட்டுப்பாடு தொடர்பில் முறைப்பாடுகளை 117 இலக்கத்துக்கு தெரிவியுங்கள்.!

Published On Monday, 16 January 2017 | 16:51:00

நாட்டில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாடு தொடர்பான முறைப்பாடுகளை 117 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார்.
தற்போது நாட்டில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக 9 மாவட்டங்களைச் சேர்ந்த  சுமார் ஒரு இலட்சத்து 49 ஆயிரத்து 598 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இவர்களில் அதிகமானவர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved