அமெரிக்காவில் 1000 புத்தகங்களை வாசித்து 4 வயது சிறுமி சாதனை !

Published On Wednesday, 18 January 2017 | 11:14:00


அமெரிக்காவின் ஜார்ஜியாவை சேர்ந்த 4 வயது சிறுமி 'ஆலியா மரியா அரானா' இன்னும் பாலர் பள்ளிக்கூடத்திற்கே செல்லாத நிலையில் 1000 புத்தகங்களை வாசித்து முடித்துள்ளாள். இந்த அரிய சாதனையை ஊக்குவிக்கும் வகையில் வாஷிங்டன் கல்வியகம் (Washington Institute)  'இன்றைய நூலகர்' (Librarian of the Day) என்ற சிறப்பை வழங்கி கௌரவித்துள்ளது.

'ஜார்ஜியாவில் பாலர் பள்ளிக்கு செல்லுமுன் 1000 புத்தகங்களை படிப்போம்' (Georgia 1,000 Books B4 Kindergarten Program) என்ற ஜார்ஜியா மாகாணத் திட்டத்தின்படி பெற்றோர்களின் உதவியால் 2 வயது முதலே படிக்கத் துவங்கிய ஆலியாவுக்கு ஆரம்பத்தில் பெற்றோர்கள் நூற்களை வாசித்து காட்டினர்.

ஆலியா 18 மாத குழந்தையாக இருந்த பொழுதே பெற்றோர்கள் புத்தகங்களை வாசித்துக் காட்டத் துவங்கியதையடுத்து ஆலியாவுக்கு புத்தகங்களை படிப்பதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. எளிதில் யாரும் நம்ப மறுக்கும் சாதனை இது.

Source: Gulf news
தமிழில்: நம்ம ஊரான்
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved