துபாயில் போக்குவரத்து விதிமீறல் குற்றத்திற்காக 1 லட்சம் திர்ஹம் அபராதம் செலுத்திய நபர்!

Published On Wednesday, 18 January 2017 | 13:44:00


பொறுப்பற்ற முறையிலும் மிக வேகமாகவும் வாகனம் ஓட்டிய அமீரக நபர் தன்னுடைய காரை விடுவித்து (impounded Car) எடுத்தச் செல்ல 1 லட்சம் திர்ஹம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆசிய நாட்டைச் சேர்ந்த பைக் ஓட்டுனர் ஒருவருக்கு நடைபாதையில் பைக்கை ஓட்டியதால் 50,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்பட்டு பைக் முடக்கப்பட்டுள்ளது என துபை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட புதிய போக்குவரத்து சட்டப்படி, பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் சட்டவிரோத கார் ரேஸில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்படியாக, 2016 ஆம் ஆண்டில் மொத்தம் 1226 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதில் 31 பேர் சட்ட விரோத பைக் ரேஸில் ஈடுபட்டவர்கள். மேலும், 325 கார்கள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டு முடக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து குற்றத்தில் ஈடுபட்டு போலீஸிடம் சிக்காமல் இருக்க தப்பித்து ஓடிய 24 பேரின் கார்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 281 ஸ்பாட் குற்றங்களும் 945 ஓட்டுனர் மீதான பொதுமக்களின் புகார்களும் பதியப்பட்டுள்ளன.

போக்குவரத்திற்கு இடையூறாக இருந்ததற்காக 119 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது அதில் 20 வாகனங்கள் சம்பவ இடத்திலேயே முடக்கப்பட்டது.

போலீஸாரிடம் முன்அனுமதி பெறாமல் சிறு விபத்துக்களை மறைத்து காருக்கு பெயிண்ட் அடித்த குற்றத்திற்காக 10 பேரும், 2 நம்பர் பிளேட்டுகளுக்கு பதிலாக ஒற்றை நம்பர் பிளேட்டுடன் வாகனம் ஓட்டிச் சென்றதற்காக 9 பேரும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பழுதான வாகனங்களை ஒட்டிச் சென்றதற்காக 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved