கட்டாரில் இனி FREE VISA என்று ஒன்று இல்லை. யாரையும் நம்பி ஏமாந்து விடவேண்டாம்!!!

Published On Monday, 19 December 2016 | 13:59:00

கட்டாருக்கு சென்று உழைக்க வேண்டும்>  ஆறிலக்க சம்பளம் பெற வேண்டும் என்பதையே நோக்கமாக கொண்டு இருப்பவர்கள் எம்மில் பலர். இந்தப் பைத்தியத்தால் பாடசாலைக் கல்வியைக் கூட ஒழுங்காகக் கற்காமல் இடையில் நிறுத்தி விட்டு 3 மாத 6 மாத  கற்கைநெறிகளை முடித்து விட்டு கட்டாருக்கு பறக்க நம்பியிருக்கும் ஒன்று இந்த ஒன்று தான் FREE VISA.

இந்த FREE VISA கலாச்சாரத்துக்கு ஆப்பு அடித்திருக்கின்றது கடந்த 13ம் திகதி டிசம்பர்-2016 முதல் அமூல் செய்யப்படும் தொழிலாளர் சட்ட திருத்தங்கள்.

FREE VISA   என்றால் என்ன?
FREE VISA    என்பதற்கு முன்னால் விசா என்றால் என்ன? என்று பார்ப்போம். விசா என்பது "சொந்த நாடு இல்லாத ஒரு நாட்டில் வெளிநாட்டவர் ஒருவருக்கு தற்காலிகமாக தங்குவதற்கு அந்நாட்டு அரசாங்கத்தால் வழங்கப்படும் அனுமதியாகும் அந்த அனுமதிக் காலம் முடிந்த பிறகு குறித்த நபர் அந்நாட்டில் தங்கியிருப்பது சட்ட விரோதமாக கொள்ளப்படும். தண்டணைக்குரிய குற்றமாக கருதப்படும்.   அந்த வகையில் கட்டாருக்கு ஒருவர் நுழைய மூன்று வகையான விசாக்கள் வழங்கப்படுகின்றன.

 1.  Work Visa
 2.  Business Visa
 3.  Visit Visa

பிசினஸ் விசா மற்றும் விசிட் விசாவில் போன்றவை தற்போது எமக்கு அவசியம் இல்லை என்பதால் அதைப் பற்றி பார்க்கத் தேவையில்லை. எமக்குத் தேவையான FREE VISA பற்றி மட்டும் பார்ப்போம்.

கட்டார் அரசாங்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு கம்பனிக்கு ஆள்தேவை என்றால் எந்த நாட்டில் இருந்து அந்த தொழிலாளரை வரவழைக்கப் போகின்றார்களோ அவரது சொல்லுபடியான கடவுச்சீட்டைப் பயன்படுத்தி Work Visa வழங்குவார்கள். இந்த வீசா கட்டார் விமான நிலையத்தில் நாம் கால் பதித்தது முதல் 90 நாட்களுக்கு சொல்லுபடியாகும். இந்த 90 நாட்களுக்குள் பணியாளருக்கு மருத்துவ பரிசோதனை அதன் பின்னர் Finger Print என்பன முறையே நடாத்தப்படும். இதில் இரண்டில் ஒன்று வெற்றியில்லை(UNFIT) என்றால் கூட தாயகத்துக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள். இவ்வாறு இரண்டிலும் திருப்தி கண்டவர்களுக்கு Visa இகாமா (RP-Resident Permit) ஆக மாற்றம் செய்யப்படும்.

 மேற்படி 90 நாட்களுக்குள் இகாமாவாக மாற்றப்படவில்லை என்றால் மேதிலமாக இருக்கும் ஒரு நாளைக்கு 10 றியால்கள் வீதம் தண்டப் பணம் அறவிடப்படும். 10 நாட்கள் என்றால் 100 றியால்கள் தண்டமாக செலுத்திய பின்பு தான் விசாவை இகாமாவாக மாற்றிக் கொள்ள முடியும். அல்லது கட்டாரை விட்டு வெளியேற முடியும்.

நாம் கட்டாருக்கு வர விசா வழங்கிய ஸ்பான்ஸர் அனுமதியளித்தால் (Fingerprintக்கு முன்னால்) அந்த 90 நாட்களுக்குள் நாம் வேறு கம்பனிக்கு NOC (NO OBJECTION CERTIFICATE) வழங்கி விட்டு மாறிக் கொள்ள முடியும். ஒரு ஸ்பான்ஸர் ஊடாக கட்டாருக்கு வந்து NOC (NO OBJECTION CERTIFICATE) ஐக் கொடுத்து வேறு ஒரு கம்பனிக்கு (ஸ்பான்ஸருக்கு) மாறுகின்ற முறைமைக்கு நாம் வைத்துக் கொண்ட பெயர் தான் “FREE VISA” என்பதாகும்

கடந்த 13ம் திகதி நடைமுறைக்கு வந்த தொழிலாளர் சட்ட திருத்தத்தின் படி ஸ்பான்ஸர் முறைமை நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக Contract Base System அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் பார்க்கும் போது NOC (NO OBJECTION CERTIFICATE) என்பது முற்று முழுதாக நீக்கப்பட்டு விட்டது.

கட்டாருக்கு நுழையும் ஒருவர் எந்தக் கம்பனியில் நுழைகின்றாறோ அந்தக் கம்பனியில் ஒப்பந்தக் காலம் வரை கட்டாயம் வேலை செய்தே ஆகமுடியும். ஒப்பந்த காலத்தில் அவர் தாயகம் சென்று கட்டாருக்கு வர முடியவில்லை என்றால் ஒப்பந்த காலம் முடிவடையும் வரை கட்டாருக்கு நுழைய முடியாது. ஒப்பந்தம் முடிவடைந்த பின்னர் அவர் ஸ்பான்ஸரின் அனுமதி இல்லாமல் கூட வேறு ஒரு கம்பனிக்கு மாறிக் கொள்ள முடியும் என்பதாக கூறப்பட்டுள்ளது.

  ஆகவே இனி யாராவது FREE VISA கட்டாருக்கு போகிறேன் என்றால் அது சாத்தியமில்லாத ஒன்று என்பதை கருத்திக்கொள்ளுங்கள். அப்படி யாராவது FREE VISA விற்பனை செய்கின்றார்கள் என்றால் யாரும் நம்பி ஏமாந்து விட வேண்டாம். அவர்கள் பொய் சொல்கின்றார்கள் என்பதே அர்த்தமாகும்.

(இது தொடர்பான அப்டேட்களை தொடர்ந்து பதிவேற்றும் செய்வோம் இன்ஸா அல்லாஹ்)
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved