கட்டாருக்கு Free Visa வில் வர இருப்பவா்கள் இதை கட்டாயம் படிங்க..... நண்பா்களுடன் பகிருங்கள்.

Published On Sunday, 11 December 2016 | 09:40:00

நாட்டிலிருந்து வந்து இன்றுடன் சரியாக 5 நாட்களாகிறது. வந்து ஒரு சில மணி நேரங்களிலியே டோஹா ஏதோ ஒன்றை இழந்து நிற்பது போல் என்னுள் ஒரு எண்ணம். ஏர்போட்டிலிருந்து வரும் வழியில் இதனை நண்பனிடம் கேட்டதற்கு "இப்பெல்லாம் முதல் மாதிரி இல்ல மச்சான்" என்ற சோர்வு கலந்த பதில்.

உண்மைதான், டோஹாவின் வழமையான வாகன நெரிசல், சன நெருக்கடி, அதன் கலை, பொழிப்பு, எதனையும் காணவில்லை.

ஆபீஸிலிருந்து 25 நிமிடங்களில் வீடு வந்து சேர முடிகிறது, வாகன நெரிசல் இல்லை, முன்பெல்லாம் குறைந்தது ஒரு மணி நேரமாவது தேவைப்படும். ஹொடேல்கள், ரெஸ்டூரண்ட்கள், ஷாப்பிங் மால்களில் வழமையான சனக் கூட்டம் இல்லை. (ஹஜ் பெருநாள் வரையும் இந் நிலை தொடருமென எதிர்பார்க்கப்படுகிறது)

இதற்கெல்லாம் காரணத்தை ஒரே வரியில் சொல்வதென்றால் "Financial crisis in response to falling oil prices".

கடந்த இரண்டு வருடங்களாக அதிக சம்பளம் பெறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்களை கத்தார் கம்பனிகள் வெளியேற்றிக் கொண்டிருக்கின்றது.

2015ன் இறுதிக்குள் கத்தார் பெற்றோலியம் (QP) தனது 3000 பணியாட்களை நீக்கி இருந்ததுடன், அதன் துணை நிறுவனங்களான RasGas, மற்றும் Danish Oil Company - Maersk போன்றவையும் நூற்றுக்கணக்கான தனது பணியாட்களை நீக்கி இருந்தது.

இது போக இவ்வருடம் ஜனவரி மாதம் ஹமாத் மெடிகல் கோப்பரேஷன் (HMC) தனது ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களையும், அல்-ஜெஸீரா நெட்வர்க்ஸ் 500 ஊழியர்களையும் பணி நீக்கம் செய்திருந்தது.

எண்ணெய் விலை வீழ்ச்சி வருவாயை ஈடு செய்ய கத்தார் பல வழிகளை கையாள்வதை காணக்கூடியதாக இருக்கின்றது. புதிய இறக்குமதி வரிகள், எதிர்காலத்தில் பொருட்களின் மீது விதிக்கத் திட்டமிடப்பட்டுள்ள வட் வரிகள், மேலும் கட்டார் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணிக்கும் ஒவ்வொரு பிரயாணிகளும் ஏர்போர்ட் பாவனைக்காக கட்டணமாக 35 ரியால்கள் செலுத்துதல் போன்றன அதில் சிலவாகும்.

ஒரு சில மாதங்களுக்கு முன்னர் எனது நண்பனின் நிறுவனத்தில் AutoCAD Draughtsman , QS அடங்கலாக 9 வேலை வாய்ப்பு வெற்றிடங்கள் இருந்தது. அந்த வேலைவாய்ப்பு சம்பந்தமாக விபரங்களை நான் எனது ஃபேஸ்புக் வோலில் போஸ்ட் செய்திருந்தேன், மேலும் என் நண்பர் அந்த விளம்பரத்தை கல்ப் டைம்ஸ் பத்திரிகையிலும் பிரசுரித்திருந்தார்.

பிரசுரித்து ஒரு வாரத்திற்குள் அந்த 9 வெற்றிடங்களுக்காக சுமார் 4000 பேர் தமது CVக்களை அனுப்பியிருப்பதாகச் சொன்னார். அப்போதுதான் தற்போது கட்டாரில் வேலைவாய்ப்பில்லாமல் வழமைக்கு மாறாக அதிகமானோர் காத்திருப்பது புரிந்தது.

இப் பொருளாதார நெருக்கடியில் இருந்து கட்டார் வீழுமா? மீளுமா? எனக் கேட்டால் நிச்சயம் மீளும் இன்ஷா அல்லாஹ். ஆனால் அதற்கு எவ்வளவு காலம் எடுக்கப் போகின்றது என்பதுதான் தெரியவில்லை.

பதிவின் நோக்கம் :
அநேகமானோரின் கருத்தின் படி இவ்வருட இறுதிவரை இந்நிலை தொடருமெனக் கூறுகின்றார்கள். 

நாட்டிலிருந்து ஃப்ரீ விசாவில் வேலை தேடி வரவிருக்கும் சகோதரர்கள் முடியுமான வரை இவ்வருட இறுதிவரை உங்கள் திட்டங்களை ஒத்திவையுங்கள்.
அஸீம் புகாரியின் முகநூல் பதிவிலிருந்து

பதிவிட்ட நாள் & நேரம்  
:September 1 at 12:07pm ·
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved