ஜனாதிபதி மைத்தியை சுடவேண்டும் என, பேஸ்புக்கில் பதிவிட்டவர் கைது செய்யப்பட்டார்!!!

Published On Thursday, 8 December 2016 | 15:36:00

ஜனாதிபதிக்கு பேஸ்புக் ஊடாக மரண அச்சுறுத்தல் விடுத்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரத்மலானை சேர்ந்த டினுஷ சமீர என்ற 26 வயது இளைஞன் கைது செய்யப்பட்டு, இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

பேஸ்புக் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டின் பேர் குறித்த இளைஞன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியை சுட வேண்டும் என்ற கருத்துக்களை குறித்த இளைஞன் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

குற்றப்புலனாய்வு பிரிவினர் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞனை எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved