Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss

7 குற்ற செயல்களுக்கு 25000 ரூபா தண்டப்பணம் உறுதி! எந்த மாற்றமும் இல்லை

Published On Thursday, 8 December 2016 | 14:09:00

7 குற்ற செயல்களுக்கு தீர்மானிக்கப்பட்ட 25,000 ரூபாய் தண்டப்பணத்தில் எவ்வித மாற்றமும் செய்யாமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

அதற்கமைய 
  1. குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், 
  2. அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுதல், 
  3. சாரதி அனுமதி பத்திரம் இன்றி வாகனம் ஓட்டுதல், 
  4. இடது பக்கதால் முன் செல்தல், 
  5. காப்புறுதி இல்லாமை, 
  6. பாதுகாப்பற்ற ரயில் பாதைகளில் சட்டத்தை மீறுதல், 
  7. சாரதி அனுமதி பத்திரம் இல்லாத ஒருவருக்கு வாகனத்தை ஓட்டுவதற்கு இடமளித்தல் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு சட்டத்தை செற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved