சவுதியில் பணி புரியும் சகோதரர்களுக்கு மிக மிக மகிழ்ச்சியான செய்தி!

Published On Monday, 22 June 2015 | 00:56:00


சவுதியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு அரசு-சார் பணிகளை எளிதாக்கவும், கஃபாலத் பித்தலாட்டங்களை முறியடிக்கவும் புதிய அடையாள அட்டை வழங்க சவுதி அரசவை முடிவு செய்துள்ளது


இது பற்றி இளவரசர் முகமது பின் நைஃப், துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர், அரசவையில் கூறியதாவது:

“சவுதியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு அரசு-சார் பணிகளை எளிதாக்கவும், கஃபாலத் பித்தலாட்டங்களை முறியடிக்கவும் இகாமா துறையை (DEPARTMENT OF JAWAZAT) மூட உள்ளோம். 

அதற்க்கு பதிலாக முக்கிய்ம் (MUQEEM) எனப்படும் தற்காலிக குடியுரிமை அட்டை ஒவ்வொரு வெளிநாட்டவருக்கும் வழங்கப்படும்.

IQAMA ஐ போன்று ஒவ்வொரு வருடமும் புதிப்பிக்க தேவை இல்லை இதன் கலாவதி காலம் முடிவற்றது. ஆனால் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்து கொள்ள வேண்டும்.

இதனை புதுப்பிக்க எந்த ஒரு அலுவலகத்திலோ அல்லது அவரவர்களின் கம்பெனிகளிலோ அடையாள அட்டையை ஒப்படைக்க தேவை இல்லை. வலைதளத்திலேயே புதுபித்துகொள்ளலாம்.

இந்த MUQEEM அடையாள அட்டையின் படியே ஒவ்வொருவருக்கும் அவர்களது

1. வங்கி கணக்கு,

2. மருத்துவ பதிவு,

3. ஓட்டுனர் உரிமம்,

4. தொலைப்பேசி இணைப்பு,

5. இருப்பிட பதிவு,

6. கடவுச் சீட்டு விவரங்கள்,

7. தூதரக விவரங்கள்,

8. காவல்துறை விசாரணை ஆகியவை பதிவு செய்யப்படும்.இந்த அட்டையை சரிபார்க்க ஒவ்வொரு சோதனை சாவடி, வங்கி மற்றும் அரசு சார் நிறுவனங்களிலும் புதிய இயந்திரங்கள் மிக விரைவில் பொருத்தப்படும்.

இதை போன்று MUQEEM துறையில் பணி செய்யும் சவுதி அரசு பணியாளர்களை கண்காணிக்க புது ரக இயந்திரங்கள் ஒவ்வொரு அலுவலகத்திலும் சவுதி அரேபியா முழுவதிலும் மிக விரைவில் பொருத்தப்படும்.

இது முழுவதிலும் வெளிநாட்டவர்களை பாதுகாக்கும் எண்ணம் வருகிற இஸ்லாமிய வருடபிறப்பு 01, Muharram 1437 H (14, October 2015) தொடங்கப்பட உள்ளது.


இதனை போல் சவுதி அரேபிய மக்களின் நலம் பேணும் வகையில் அவர்களது MUQEEM அடையாள அட்டைகளிலும் சில மாற்றங்கள் வருவதாகவும் தெரிவித்தார்...!
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved